இராணுவத்தின் வசம் உள்ள காணிகள் குறித்து கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor
இராணுவத்தின் வசம் உள்ள காணிகள் குறித்து கலந்துரையாடல்..

முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்க ளில் இராணுவத்தின்வசம் உள்ள காணிகள் கு றித்த கலந்துரையாடல்கள் 23ம், 25ம் திகிதிகளி ல் நடைபெறவுள்ளது. 

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா தலமையில் கடந்த வாரம் இடம்பெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான சிறப்புச்  செயலணியின் கூட்டத் தீர்மானத்தின் பிரகாரம் 

டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்பாக தனியார் காணிகள் மற்றும் பாடசாலைகளை படையினரின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். 

என அரச தலைவர் தெரிவித்ததோடு இதற்காக இரு மாகாண முதலமைச்சர்கள் தலமையில் குழு நியமிக்கப்பட்டது. இதன் பிரகாரம் பாதுகாப்பு படையினர் வசமுள்ள நிலங்கள் விடுவிப்புத் 

தொடர்பில்  எதிர்வரும் 23ம் திகதி காலை 10 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட காணிகள் தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் ஆராயப்படவுள்ளதோடு

 மாலை 4 மணிக்கு வவுனியா மாவட்ட நிலவரம் தொடர்பில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இதேபோன்று கிளிநொச்சி மாவட்ட கலந்துரையாடல் 23ம் திகதி மாலை 2 

மணிக்கு மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள தனியார் நிலங்களை விடுவிப்பது தொடர்பில் எதிர்வரும் 25ம் திகதி மாலை 3 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்தில் 

இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.