SuperTopAds

அரசியலில் இருப்பதா..? இல்லையா..? 24ம் திகதி முடிவை அறிவிக்கவுள்ள சீ.வி..

ஆசிரியர் - Editor I
அரசியலில் இருப்பதா..? இல்லையா..? 24ம் திகதி முடிவை அறிவிக்கவுள்ள சீ.வி..

வட மாகாணசபையின் ஆட்சிக் காலம் 24ம் திகதி ந ள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் 24ம் திகதி காலை முதலமைச்சர் தனது எதிர்கால திட்டம் குறி த்து மக்களுக்கு அறிவிக்கவுள்ளார்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் கூட்­டம் எதிர்­வ­ரும் 24ஆம் திகதி காலை 9.30மணிக்கு நல்­லூர் ஆலய வடக்கு வீதி­யில் அமைந்­துள்ள நட­ராஜா பர­மேஸ்­வரி மண்­ட­பத்­தில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

இது தொடர்­பில் தமிழ் மக்­கள் பேரவை ஊடக அறிக்கை ஒன்றை அனுப்­பி­யுள்­ளது. அதில் உள்­ள­தா­வது-

தமிழ் மக்­க­ளின் தற்­போ­தைய பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லா­னது மக்­கள் பங்­க­ளிப்­பு­டன் கூடிய ஒரு அர­சி­யல் பய­ண­மாக மாற்­ற­ம­டைய வேண்­டிய கால கட்­டத்­தி­லுள்­ளது.

இந்த மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் நோக்­கி­லும் தமிழ் மக்­க­ளின் அர­சி­யல் அபி­லா­சை­களை அடைந்து கொள்­வ­தற்­கான வழித்­த­டம் எவ்­வாறு அமைய வேண்­டும் என்­பது தொடர்­பி­லும், அதில் தமிழ் மக்­கள் பேர­வை­யின் வகி­பா­கம் தொடர்­பி­லும் சில தீர்­மா­னங்­களை மேற்­கொள்­ளும் மாபெ­ரும் மக்­கள் ஒன்­று­கூ­டல் 24ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­தக் கூட்­டத்­தில் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரும் தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத் தலை­வ­ரு­மான நீதி­ய­ர­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் சிறப்பு உரை­யாற்­ற­வுள்­ளார். தனது எதிர்­கால அர­சி­யல் நிலைப்­பாடு தொடர்­பி­லும் தமிழ் மக்­க­ளுக்கு அறி­விக்­க­வுள்­ளார்.

இந்த ஒன்று கூட­லுக்கு அர­சி­யல் வேறு­பா­டு­க­ளைக் கடந்து பொது­மக்­கள், பொது அமைப்­புக்­கள், தொழில் சங்­கங்­கள் கல்­விச் சமு­கத்­தி­னர் மற்­றும் இளை­யோர் கலந்­து­கொள்ள வேண்­டும்.- என்­றுள்­ளது.