இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் தரத்தை உறுதி செய்யுங்கள். யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் கடிதம்..

ஆசிரியர் - Editor
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் தரத்தை உறுதி செய்யுங்கள். யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் கடிதம்..

யாழ்ப்பாண மாவட்டத்தில் பயணிக்கும் இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்துச் சாரதிகள் சாலை விதிமுறையினையும் பேரூந்துகளின் தரத்தினையும் பேணுவதனை உறுதி செய்ய அறிவுறுத்துமாறு முகாமையாளருக்கு யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பணிப்பாளர் சத்தியமூர்த்தி கடிதம் எழுதியுள்ளார்.

வடமாகாணத்தில் தற்போது அதிகரித்திருக்கும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இ.போ.சபை பேரூந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்தி ஓடுமாறு அதன் சாரதிகளிற்குப் பணிப்புரை விடுக்க வேண்டும். அதற்கமைய குடாநாட்டில் மக்கள் நெருக்கடியான வீதிகள், அதிக பயன்பாட்டு வீதிகள் என அனைத்து வீதிகளும் இ.போ.சபை பேரூந்துகள் அதிக வேகத்திலேயே பயணிக்கின்றனர்.

இவ்வாறு இ.போ.ச பேரூந்துக்கள் அதிக வேகத்தில் பயணிப்பதால் தனியார் பேரூந்துகளும் போட்டி மனப்பாண்மையில் அதிக வேகத்தில் பயணிக்கின்றனர். இதன் காரணத்தினால் இ.போ.சபையின் பேரூந்துகள் வேகத்தை கட டுப்படுத்தியே ஆக வேண்டும். இதனை இ.போ.சபை ஓர் முன்னுதாரணமாக மேற்கொண்டால் குடாநாட்டில் இடம்பெறும் அதிக விபத்துக்களை நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும்.

இ.போ.சபைநின் முன்னுதாரணத்தை அடுத்த கட்டமாக ஏனையோரும் கடைப்பிடிக்க முடியும். ஏனெனில் குடாநாட்டில் தற்போது அதிகரித்துச் செல்லும் விபத்துக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டிய மருத்துவக் கடப்பாடு எமக்கும் உண்டு என்ற வகையில் இச் செயற்பாட்டிற்கு இ.போ.சாவின் ஆதரவைக் கோருகின்றோம். என குறித்த கடித்த்தில் கோரப்பட்டுள்ளது. 

Radio
×