SuperTopAds

மக்கள் நடாம்டம் அதிகமான யாழ்.பிரதான வீதியில் களவாடப்படும் மோட்டாா் சைக்கிள்கள், வேடிக்கை பாா்க்கும் பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
மக்கள் நடாம்டம் அதிகமான யாழ்.பிரதான வீதியில் களவாடப்படும் மோட்டாா் சைக்கிள்கள், வேடிக்கை பாா்க்கும் பொலிஸாா்..

யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின்  முன்பாக இரண்டு நாள் இடைவெளியில் இரண்டாவது மோட்டார் சைக்கிளும் களவாடப்பட்டுள்ளது. இந்நிலையிலும்  பொலிஸாரின் அசமத்தப்போக்கு தொடர்வதாக  மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம்   போதனா வைத்தியசாலையின் முன்பாக இடம்பெறும்  மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமாக செயல்படாதமையினால் களவர்கள் சாதாரணமாக தமது கைங்கரியத்தை தொடர்வதாக  மக்கள் விசணம் தெரிவிக்கின்றனர்.  

வைத்மியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியை பார்வையிட்டு வெளியேறியவரின் மோட்டார் சைக்கிள் கடந்த வியாழக் கிழமை களவாடப்பட்ட நிலையில் வெள்ளிக் கிழமை காலையிலும் மற்றுமோர் மோட்டார் சைக்கிள் இதே பிரதேசத்தில் களவாடப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தைப்பேற்றிற்காக. அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியை  பார்வையிட வந்தவர் வியாழன் மாலை  5.30 மணியளவில்  வைத்தியசாலையின் முன்னாள் வீதியில்  மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வைத்தியசாலையின் உள்ளே நுழைந்துள்ளார்.  

அவ்வாறு 5.30 மணியளவில் நுழைந்நவர் 6 மணியை தாண்டிய நிலையில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய நிலையில்  XL - 2587 இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டிருந்தது. இதே இடத்தில் இதேபோன்று பல்சர் ரக புதிய மோட்டார் சைக்கிள் ஒன்று மறுநாள் காலையில் களவாடப்பட்டுள்ளது. 

4 லட்டத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய மோட்டார் சைக்கிளின் பெறுமதியாக உள்ள நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளின் தற்போதைய தரத்தில் 3 லட்ஞம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையது எனத் தெரிவிக்கப்படுகின்றது.