அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா சபைக்கு மகஜா் கையளித்த பல்கலைக்கழக மாணவா்கள்..
இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களல் விடுதலைக்கான நடை போராட்டத்தின் ஊடக அறிக்கையும் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபை ஆக்கபூர்வமாக செயற்படவேண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வலியுறுத்தி
அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் மகஜர் கையளிக்கப்பட்டது. இதில் மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமீனன் உடன் நடைபயண போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெண் மாணவிகள் என அனைவரும் ஐ.நா யாழ்ப்பாண அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மகஜரை கையளித்தனர்.
கடந்த சனிக்கிழமை நடைபயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அனுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க முடியவில்லை இதன் காரணமாக இன்றைய தினம் 15 10 2018 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.