SuperTopAds

மணல் அகழ்வில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முஸ்த்தீபு..

ஆசிரியர் - Editor I
மணல் அகழ்வில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முஸ்த்தீபு..

கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னங்கண்டிப் பகுதியில் இடம்பெற்ற திருட்டு மணல் அகழ்வில் தொடர்புபட்டதாக இடமாற்ற் செய்யப்பட்ட 5 பொலிசாருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில்   வடக்கு மாகாண குற்றப் புலனாய்வு அதிகாரி உள்ளிட்ட குழுவினர் நேற்று முழுவதும் கிளிநொச்சியில் விசாரணையில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி பன்னங்கண்டிப் பகுதியில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சுமார் 6 மாதங்களாக  30ற்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களில் மணல் கொள்ளை இடம்பெற்றது. இது தொடர்பில் கிளிநொச்சிப் பொலிசாருக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியும் பொலிசார் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

 இதனை ஆராய்ந்தபோது அங்கு மணல் கொள்ளையில் ஈடுபட்ட டிப்பர் வண்டிகள் மாவட்டத்தில் பணியாற்றும்  பொலிஸ் அதிகாரிகளிற்குச் சொந்தமானவை என பொது அமைப்புக்கள்  கண்டறிந்தனர்.  இதனையடுத்து மாவட்டச் செயலாளரின் ஊடாக சில பொது அமைப்புகள் குறித்த விடயத்தினை பொலிஸ் தலமையகத்தின் கவனந்திற்கு கொண்டு சென்றனர். 

இதன் அடிப்படையில் இன்றைய தினம் வடக்கு மாகாண புற்றப்புலனாய்வு அதிகாரி தலமையிலான ஐவர் அடங்கிய பொலிஸ் குழுவினர் கிளிநொச்சியில் நேரில் விசாரணையில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த குற்றச் சாட்டை முன்வைத்த ஒருவரின் வீட்டில் இது தொடர்பான தகவல்கள் ஆதாரங்கள் தெரிந்தவர்கள் 

அப்பகுதி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை அழைத்த அதிகாரிகள் இவை நொடர்பான தகவல்கள் ஆதாரங்களை சேகரித்துக் கொண்டனர்.  இதில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுடலடிக்காட்டிய மணல் கொள்ளை இடம்பெற்ற பகெதிக்கும் குறித்த குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

 இதன் அடிப்படையில் குறித்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு எதிராகவும் வழங்குத் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.