அரசியல் கைதிகளுக்கான எங்களின் குரல் இன்னும் ஓயவில்லை என்கிறாா் மனோகணேசன்..

ஆசிரியர் - Editor I
அரசியல் கைதிகளுக்கான எங்களின் குரல் இன்னும் ஓயவில்லை என்கிறாா் மனோகணேசன்..

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நாம் தொடர்ச்சியாக அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதுடன் அரசுக்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் போராட்டங்களில் பங்கெடுத்து வருகின்றோம் என கூறியுள்ள அமைச்சர் மனோகணேசன், 

அரசுக்கு உள்ளே நடக்கும் போராட்டங்கள் வெளியே தெரிவதில்லை. ஆனால் அரசுக்கு வெளியே நடக்கும் போராட்டங்கள் வெளியே தெரிகின்றன. அதனால் அவை பெரிதாக பேசப்பட்டுக் கொ ண்டிருக்கின்றன எனவும் கூறியிருக்கின்றார். 

யாழ்.குடாநாட்டுக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மனோகணேசன் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியான உணவு தவிர்ப்புப்

போராட்டத்தை நடாத்திவருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு சார்பாக வடகிழக்கு மாகா ணங்களிலும், கொழும்பிலும் போராட்டங்கள் நடாத்தப்படுகின்றன. இதற்காக நல்லிணக்க அ மைச்சர் என்ற அடிப்படையில் தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? 

என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், அரசுக்கு வெளியே போராட்டங்கள் நடக்கின்றன. அதேபோல் அரசுக்கு உள்ளேயும் போராட்டங்கள் நடக்கின்றன. 

அரசுக்கு வெளியே நடக்கும் போராட்டங்கள் அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் அரசுக்கு உள்ளே நடக்கும் போராட்டங்கள் வெளியே தெரிவதில்லை.  நாங்கள் அரசுக்கு உள்ளே நான் போராட்டங்களை நடாத்தி வருகின்றேன். 

அமைச்சர் சம்பிக்க ரணவக்க இராணுவத்திற்கும், அரசியல் கைதிகளுக் கும் பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என ஒரு யோசனையை கொண்டுவந்தார். அதனைத் தமிழ் தரப்புக்கள் நிராகரித்து விட்டன. 

ஆனால் அவ்வாறு நிராகரிக்கவேண்டிய அவசியம் இ ல்லை. என்னை பொறுத்தளவில் அதனை ஒரு ஆரம்ப புள்ளியாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்க முடியும். நான் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் கலந்துரையாடினேன். 

அப்போது கடத்தல்கள், கொள்ளைகள் மற்றும் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இராணுவத்தையும் சேர்த்தா? பொதுமன்னிப்பு கேட்கிறீர்கள் என கேட்டபோது இல்லை என கூறினார்கள். இவ்வாறு கலந்துரையாடல்களை நடாத்தியிருக்கலாம். 

மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்காமல் நான் இருக்கவில்லை. நான் அரசாங்கத்தில் இருந்தாலும் கூட என்னுடைய கட்சி உறுப்பினர்கள் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான போராட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றார்கள். 

ஆகவே எங்களுடைய நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. தொடர்ந்தும் அரசியல் கைதிகளுக்காக பேசுவோம் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு