யாழில் உள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

ஆசிரியர் - Editor II
யாழில் உள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

யாழ் நகர்ப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒருதொகை ஆயுதங்கள் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டின் அலுமாரி ஒன்றிலிருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, வாள்கள் இரண்டு, வோக்கி டோக்கி இரண்டு, மகஸின் ஆறு, பொஞ்ச் இரண்டு போன்ற ஆயுதங்களே மீட்கப்பட்டன.

சந்தேகத்தின்பேரில் வீட்டில் வசித்த ஒருவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் உரிமையாளர் லண்டனில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு