இரா.சம்மந்தன் தன் பொறுப்பை உணர்ந்து நிதானமாக தீர்மானம் எடுக்கவேண்டும்..

ஆசிரியர் - Editor I
இரா.சம்மந்தன் தன் பொறுப்பை உணர்ந்து நிதானமாக தீர்மானம் எடுக்கவேண்டும்..

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகுவது தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு பாதகமான விளைவுகளை உண்டாக்கும் என கூறி யிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவரான த.சித்தார்த்தன், 

கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தன் பொறுப்பை உணர்ந்து நிதானமாக தீர்மானம் எடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளார். 

சுன்னாகம்- கந்தரோடை பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் அ லுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அ வர் கூறுகையில், 

முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இப்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பில்தான் இருக்கின்றார். அடுத்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவாரா? இல்லையா? என்பது அவருடைய தனிப்பட்ட முடிவாகும். 

முதலமைச்சர் கூட்டமைப்பில் இருந்து விலகுவதான முடிவெடுத்தால் அது பாதகமான முடிவாக இருக்கும். அந்த முடிவ நிச்சையமாக தமிழ் மக்களுக்கு பெரும் பதகமான விளைவினை ஏற்படுத்தும். 

குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியல் முதலமைச்சருக்கு கனிசமான செல்வாக்கு உள்ளது. இதனால் தேர்லில் அவர் கூட்டமைப்பில் ஈருந்து பிரிந்து போட்டியிடும் போது தமிழ் மக்களின் வாக்குகள் இரண்டாக பிரிவடையும். 

இதனை தடுத்து நிறுத்த வேண்டியது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் பொறுப்பாகும். அந்த பொறுப்பை உணர்ந்து நல்ல முடிவினை சம்மந்தன் எடுப்பார் என்று நம்புகின்றேன். 

வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக யார் களமிறக்கப்படுவார்கள் என்று இப்போது கூற முடியாது. 

ஏனெனில் தென்னிலங்கை அரசியல் நிலவரங்களைப் பார்க்கும் போது மாகாண சபைகளுக்கான தேர்தல் ஒரு வருட கால இழுத்தடிப்பு செய்யப்பட்ட பின்னரே நடத்தப்படும் என்ற நிலையில் உள்ளது. 

இந்த நிலையில் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு முதலமைச்சராக யார் தேர்தலில் நிறுத்தப்படுவார்கள் என்று விவாதங்களை செய்து இருக்கும் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என்று நினைக்கின்றோம்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனை நாங்கள்தான் கொண்டுவந்தோம். எங்களுக்குள் தனிப்பட்ட ரீதியில் கோபதாபங்கள் இருந்தாலும் அதனை பேசி தீர்க்க வேண்டும். சுமந்திரனுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

இந்த நிலை தொடரக் கூடாது. இந்த நிலை தொடருமாக இருந்தால் அது கூட்டமைப்புக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. அது மக்கள் மத்தியல் வெறுப்புணர்வை கொண்டுவரும். 

தமிழரசு கட்சிக்குள் உள்ள பலர் விக்னேஸ்வரனை அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்ற சிந்தனையில் உள்ளார்கள். தமிழரசு கட்சியில் இருந்தே கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் நிறுத்தப்படுவார். 

அங்கத்துவ கட்சிகளில் முதலமைச்சருக்கு தகுதியானவர் உள்ளார்களா? இல்லையா? என்பதற்கு அப்பால் தமிழரசு கட்சியினர் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் இருந்து ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும் சிந்தனையில் இருக்க மாட்டார்கள். 

ஆகவே அடுத்து வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் தமிழரசு கட்சி முடிவு எடுத்த பின்னரேஇ கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலேஇ புளோட் போன்ற கட்சிகள் அது தொடர்பில் சிந்திக்க முடியும். 

ஆனால் இதுவரையில் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கட்சிகளுக்குள் தீவிரமாக ஆராய்வுகளையோ அல்லதுஇ பேச்சுக்களையே செய்யவில்லை என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு