SuperTopAds

கிளிநொச்சி வைத்தியசாலையில் மகப்பேற்று மருத்துவர் இல்லை...

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி வைத்தியசாலையில் மகப்பேற்று மருத்துவர் இல்லை...

கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் கடந்த ஒரு மாதகாலமாக மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் வைத்திய நிபுணர் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் பெரிதும் பதிப்பை எதிர்நோக்குவதாகவும் , 

அதனால் உடனடியாக வைத்திய நிபுணரை நியமிக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

கிளிநொச்சி வைத்திய சாலைக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் குறித்த போராட்டத்தை கர்ப்பிணி பெண்கள் முன்னெடுத்திருந்தனர். 

குறித்த போராட்டத்தின் முடிவில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா,குணசீலனுக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.