யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழை - நீரேரியின் நீர்மட்டம் அதிகரிப்பால் மக்களுக்கு எச்சரிக்கை!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழை - நீரேரியின் நீர்மட்டம் அதிகரிப்பால் மக்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து கொட்டிவரும் கன மழை காரணமாக தொண்டமானாறு கடல் நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கடல்நீரேரியை சூழவுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இந்நிலை நீடிக்குமாக இருந்தால் தொண்டமானாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்க கூடும். எனவே, கோப்பாய், அச்சுவேலி, புத்தூர், வாதரவத்தை மற்றும் மண்டான் ஆகிய பகுதி மக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் என். சுதாகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, யாழ். காரைநகர் வீதியில் கல்லுண்டாய் சந்தியிலிருந்து அராலி வடக்கு வரையான பகுதியில் வீதிக்கு மேலால் வெள்ளம் பாயும்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழுக்கை ஆறு வாய்க்காலின் நீர் மட்டம் அதிகரித்ததாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், வழுக்கை ஆறு வாய்க்காலின் 10 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே, யாழ்ப்­பா­ண மாவட்­டத்­தில் தொட­ரும் அடை மழை­யால் 2 ஆயி­ரத்து 518 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 9 ஆயி­ரத்து 141 பேர் பாதிப்­ப­டைந்­துள்­ள­னர். 4 வீடு­கள் முழு­மை­யா­க­வும், 159 வீடு­கள் பகுதி அள­வி­லும் சேத­ம­டைந்­தன. இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தெரி­வித்­தார்.

“ மழை தொட­ரு­மாக இருந்­தால் தாழ் நிலப் பகுதி மக்­கள் இன்­னும் இடம்­பெ­யர வேண்­டிய நிலமை ஏற்­ப­டும். உடு­வில் பிர­தேச செய­லர் பிரி­வில் 106 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 385 பேரும், ஊர்­கா­வற்­று­றைப் பிர­தேச செய­லர் பிரி­வில் 40 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த137 பேரும், காரை­ந­கர் பிர­தேச செய­லர் பிரி­வில் 8 குடும்­பங் க­ளைச் சேர்ந்த 27 பேரும், யாழ்ப்­ பா­ணம் பிர­தேச செய­லர் பிரி­வில் 55 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 209 பேரு ம், நல்­லூர் பிர­தேச செய­லர் பிரி­வில் 146 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 552 பேரும், கோப்­பாய் பிர­தேச செய­லர் பிரி­வில் 249 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 893 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

சங்­கானை பிர­தேச செய­லர் பிரி­வில் 273 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரத்து 66 பேரும், சண்­டி­லிப்­பாய் பிர­தேச செய­லர் பிரி­வில் 128 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 444 பேரும், தெல்­லிப்­பழை பிர­தேச செய­லர் பிரி­வில் 393 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரத்து 253 பேரும், சாவ­கச்­சேரி பிர­தேச செய­லர் பிரி­வில் 189 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 759 பேரும், பருத்­தித்­து­றைப் பிர­தேச செய­லர் பிரி­வில் 283 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரத்து 45 பேரும், மரு­தங்­கேணி பிர­தேச செய­லர் பிரி­வில் 643 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 2 ஆயி­ரத்து 382 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­ள­னர்- என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு