ஸ்மார்ட்போன் மூலம் வெள்ள பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்

ஆசிரியர் - Admin
ஸ்மார்ட்போன் மூலம் வெள்ள பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்

ஸ்மார்ட்போன்களில் வெப்பநிலை, காற்றழுத்தம் போன்றவற்றை டிராக் செய்யக் கூடிய நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வெள்ளம் போன்ற பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் வானிலையை முன்கூட்டியே கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் இதர இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே கண்டறிய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“நம் ஸ்மார்ட்போன்களில் உள்ள சென்சார்கள் நம் சுற்றுச்சூழல் மற்றும் ஈர்ப்பு விசை மற்றும் புவியின் காந்த புலம், காற்றழுத்தம், வெப்பநிலைகள், ஒலி அளவுகள் மற்றும் பலவற்றை தொடர்ந்து டிராக் செய்து வருகிறது,” என மூத்த ஆராயாச்சியாளரும், டெல் அவிவ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியருமான காலின் பிரைஸ் தெரிவித்தார்.

“உலகம் முழுக்க சுமார் 300 முதல் 400 கோடி ஸ்மார்ட்போன்களில் இந்த தகவல்கள் பரவிக்கிடக்கின்றன. இந்த தகவல் கொண்டு வானிலையை மிக துல்லியமாக டிராக் செய்து மற்ற இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆய்வின் ஒரு பகுதியாக நான்கு ஸ்மார்ட்போன்களை கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் வைத்து, அதன் டேட்டாவை கொண்டு சூறாவளி போன்றவற்றை கணிக்க பயன்படுத்தினர், இவை கடலில் ஏற்படும் புயலுக்கு இணையானது. இவற்றுடன் இவர் லண்டனை சேர்ந்த வெதர்சிக்னல் எனும் செயலியையும் பயன்படுத்தினர்.

ஸ்மார்ட்போன்களால் வானிலை அறிக்கையை உடனுக்குடன் வழங்கக்கூடிய நிலையில், மக்கள் வானிலை விவரங்களை க்ளவுட் மூலம் செயலியில் அதனை தெரிந்து கொள்கின்றனர். இந்த தகவல்களை கொண்டு ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து அவர்களுக்கு முன்கூட்டியே தகவல்களை வழங்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு