அறிக்கைகளாக மட்டும் இருக்கக் கூடாது! - சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஆசிரியர் - Editor II
அறிக்கைகளாக மட்டும் இருக்கக் கூடாது! - சுரேஸ் பிரேமச்சந்திரன்

வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் வெறும் அறிக்கைகளாக மாத்திரம் இருந்து விடக் கூடாது என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “ 2018 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்துக்கெனப் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. முன்னாள் போராளிகளுக்குத் தொழில் வாய்ப்பு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல இலட்சம் கோடி நிதியை அரசாங்கம் வெளிநாடுகளுக்குக் கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் மேலதிக கடன்களைப் பெறுவது சாத்தியமா? இத்தகைய நிலையில் புதிய வரவு செலவுத் திட்டத்தில் வட மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மூலம் எமது மக்களின் தேவைகள் நிறைவேறுமா என்பது சந்தேகத்திற்குரியது.

புதிய வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை 675 பில்லியன் ரூபாவாகவுள்ளது. இந்தத் துண்டுவிழும் தொகையை நாடுகள் அல்லது நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் கடனாகப் பெற்றுக் கொள்ளப் போகிறதா? அல்லது இந்தத் தூண்டுவிழும் தொகையை நிவர்த்தி செய்வதற்காக மேலதிக வரிகள் நடைமுறைப்படுத்தப்படப் போகிறதா? வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அனைத்து முன்மொழிவுகளும் மக்களைச் சென்றடைந்தால் அது பாராட்டுக்குரியதாகவும், பெரும் வரவேற்புக்குரியதாகவும் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு