கச்சதீவில் வணிக வளாகத்தை திறந்தது இலங்கை கடற்படை! தமிழக மீனவர்கள் அதிர்ச்சி

ஆசிரியர் - Editor II
கச்சதீவில் வணிக வளாகத்தை திறந்தது இலங்கை கடற்படை! தமிழக மீனவர்கள் அதிர்ச்சி

கச்சதீவில் இலங்கை கடற்படையினர் பொழுது போக்கு வணிக வளாகத்தை திறந்திருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அடிக்கடி தாக்குதல் நடத்துவதையும் கைது செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி அலுத்து விட்டனர் தமிழக மீனவர்கள்.

மீனவர்கள் பிரச்சினைக்கு இதுவரை மத்திய மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காணவில்லை. இந்நிலையில் கச்சதீவில் இலங்கை கடற்படையினரின் வணிக வளாக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.

கச்சதீவில் ஏற்கனவே கடற்படை தளம் அமைத்த நிலையில் தற்போது பொழுது போக்கு வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது.

மீனவர்களை கண்காணிப்பதற்காகவும் வணிக வளாகம் பயன்பத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு