முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் பிரச்சினைகள் குறித்து முக்கிய சந்திப்பு..
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் நில அபகரிப்பு மற்றுப் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சணைகள் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலமையிலான குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு பகுதி மகாவலி எனவும் மறுபக்கம் மீன்பிடி தொழில் என்னும் பெயரில் தென்னிலங்கை ஆக்கிரமிப்பும்இடம்பெறும் அதேநேரம் எஞ்சிய இடங்கள் தொல்பொருள் திணைக்களம் சொந்தம் கொண்டாடுகின்றது.
இவ்வாறு அனைத்து வழிகளிலும் ஆக்கிரமிக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டம் அழிக்கப்படும் நிலையில் முல்லைத்தீவு மக்களையும் மாவட்டத்தையும் காக்கும் வகையில் முதலமைச்சர் என்ற வகையில் ஆவண செய்ய வேண்டும்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தினை ஆக்கிரமித்து சில சிங்களக் குடும்பங்கள் அத்துமீறிக் குனியிருக்கின்றனர். அவ்வாறு குடியிருக்கும் மக்களிற்கு எதிராக பிரதேச செயலாளர் அரச நிலத்தை அத்துமீறி அபகரித்து உடமையாக்குவதை தடுக்கும் வகையில் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கு இடம்பெறுபவர்களிற்கு மகாவலி அதிகார சபை காணி அனுமதிப் பத்திரத்தினை வழங்கியுள்ளது. இந்தச் செயல்பாடு எதிர்காலத்தில் மாவட்டத்தில் பாரிய நிலமையை ஏற்படுத்தும்.
எனவே இதனை தடுப்பதோடு எனைய விடயங்கள் தொடர்பிலும் ஆவண செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதோடு உடனடியாக மகாவலி அமைச்சிற்கு இது தொடர்பில் கடிதம் அனுப்புவதோடு மீனவர் விடயத்திலும் கவனம் செலுத்தப்படும். என முதலமைச்சர் பதிலளித்தார்.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் அப் பிரதேச பங்குத் தந்தை மாவட்ட புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.