ஐனநாயக வாக்கு உரிமையை சரியாக பயன்படுத்துங்கள்.

ஆசிரியர் - Editor I
ஐனநாயக வாக்கு உரிமையை சரியாக பயன்படுத்துங்கள்.

உள்ளூராட்சிசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் அறிந்தவர், அறியாதவர் என பார்க் காமல் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற கூடியவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என வடமாகா ணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கேட்டுள்ளார். மேலும் மக்கள் தம் ஜனநாயக உரிi மயை சரியாக பயன்படுத்துவதாலேயே சிறந்த சேவையை வழங்க இயலும் எனவும் கூறியுள்ளார்.

மாகாணசபையின் 2018ம் ஆண்டுக்கான பாதீட்டு அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டப த்தில் நiபெற்றிருந்தது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவை தலைவர் சீ.வி.கே.சிவஞான ம் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், முக்கியமான விடயம் 2018ம் ஆண்டுக்கான பாதீடு அந்த பாதீட்டு விவாதம் இன்று சபையில் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

ஆனால் காலை 9.40 மணிக்கு சபையை எட்டி பார்த்தபோது சபையில் 12 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தார்கள். அந்த நேரம் முதலமைச்சர் சபைக்கு வந்துவிட்டார். வெளிமாவட்டங்களை சேர் ந்த உறுப்பினர்கள் சபைக்கு வந்துவிட்டார்கள். ஆனால் யாழ்.மாவட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டு ம் சபைக்கு வரவில்லை. எனவே மக்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபை தேர்தலில் என்றாலும் சரி

யான பிரதிநிதிகளை தேர்வு செய்யவேண்டும். இரண்டு தோணிகளில் கால் வைத்து கொண்டிருப்பவர்க ளை மக்கள் தேர்வு செய்ய கூhது. எங்களுடைய மண்ணில் 400 ரூபாய் நடாளுமன்றத்தில் படியை பெற் று கொண்டு அரசியலை சேவையாக செய்தவர்கள் இருக்கிறார்கள். அவ்வாறானவர்கள் இருந்த இடத் திலேயே இன்றைக்கு இவ்வாறனவர்களும் இருக்கிறார்கள். நாடாளுமன்றில் சுந்தர்லிங்கம் என்று ஒ

ரு நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தார். அவர் இடது பக்க கதவால் நுழைந்து வலது பக்க கதவால் வெளியேறி விடுவாராம். அவ்வாறு இங்கேயும் நடக்கிறது. வருவார்கள் கையொப்பம் போடுவார்கள் சென் றுவிடுவார்கள். எனவே மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும். தங்களுக்கு சேவை செய்யக் கூடியவர்களை சரியாக அடையாளம் கண்டு தங்கள் ஜனநாயக உரித்தை பயன்படுத்தி வாக்களித்து அ

வர்களை தங்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யவேண்டும். அதனை இந்த உள்ளுராட்சிசபை தேர்தலி லும் மக்கள் செய்யவேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு