நீளமான சந்திர கிரகணம்

ஆசிரியர் - Editor II
நீளமான சந்திர கிரகணம்

வெள்ளிக்கிழமை நிகழவிருக்கும் சந்திரகிரகணமானது 1 மணிநேரம் 45 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஜூலை 27அதாவது வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இம்முறை சந்திரன்  பூமி  மற்றும் சூரியன் எல்லாம் ஒரே கோட்டில் சந்திக்கவிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் சந்திரன் சரியன நேர்கோட்டில் வராததால் முழுமையான சந்திர கிரகணம் நிகழாது. ஆனால் இந்த முறை சந்திர கிரகணமானது முழுமையாக நிகழ உள்ளது.

இதுதொடர்பாக டெல்லி விண்வெளி ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த அஜய் தால்வர் கூறியதாவது

‘ இம்முறை மழைக்காலம் என்பதால்  சந்திரகிரகணத்தை பார்க்கும்போது, மேகங்கள் இடையூராக இருக்கலாம். மேலும் நம்மால் சந்திரனில் இருந்து பார்க்க முடிந்தால் பூமி சூரியனை மறைப்பதை பார்க்க முடியும். மேலும் இந்த ஆண்டு மட்டும் மூன்று முக்கிய நிகழ்வு நிகழ்கிறது மிக சிறப்பு.

கடந்த ஜூலை 13 ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வருகின்ற வெள்ளிகிழமை சந்திரகிரகணம் நிகழ்கிறது. மேலும் வருகின்ற ஜூலை 31 ஆம் தேதி செய்வாய் கிரகம் பூமியை நெருங்கி வருகிறது ‘ என்று அவர் கூறினார்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு