இறந்தவர்களின் அஸ்தியை நிலவிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் விஞ்ஞானி

நாசாவின் பொறியியலாளர்களில் ஒருவரான தாமஸ் சைவட் என்பவர் சர்ச்சை மிகுந்த கருத்துடன் ஒரு நிறுவனத்தை தோற்றுவித்துள்ளார்.
உலகில் வாழும் மக்களிடையே இறந்தால் நமது ஆத்மா சொர்க்கத்திற்கு செல்லும் அல்லது நரகத்திற்கு செல்லும் என்ற கருத்து தொன்றுதொட்டே இருந்து வருகின்றது.
இந்தநிலையில் நாசா விஞ்ஞானி தாமஸ் உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் ”எலிசியம்” என்பதாகும்.
இந்த நிறுவனம் பற்றி அவர் கூறுகையில், எல்லோரும் இறந்தவுடன் சொர்க்கம் செல்வோம் அல்லது நரகம் செல்வோம் என்று எண்ணுகிறார்கள்.
ஆனால் நான் உருவாக்கியுள்ள இந்த நிறுவனம் ஆஸ்ட்ரோஸ்பேஸ் டெக்னோலஜியுடன் இணைந்து இறந்தர்களின் சாம்பலை நிலவில் தூவுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.
உண்மையான சொர்க்கத்திற்கு எனக்கு வழிகாட்ட முடியாது நிலவு எல்லோராலும் விரும்பப்படும் ஒன்று.
அங்கு அஸ்தியை கொண்டு சேர்ப்பது என்பது முடியாத காரியம்.
அதனால் கண்முன் தோன்றும் நிலவு எனும் சொர்க்கத்திற்கு அஸ்தியை கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இதுவரை பலரது அஸ்தி சாம்பல்களை சேகரித்து வைத்துள்ளது.
ஆனால் இதுவரை கொண்டு சேர்க்கப்படவில்லை, இதனால் கட்டணம் செலுத்தியவர்கள் எல்லாம் எப்போது நடந்து முடியும் என கேள்விகளை எழுப்பி வண்ணமாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.