யாழில். நான்கு சபைகளில் தவிசாளர் பதவி கேட்டுள்ள சங்கு

யாழ்ப்பாணத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உட்பட 4 சபைகளில் தமது கூட்டணி ஆட்சி அமைக்க தமிழரசு கட்சி ஆதரவு தர வேண்டும் என கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில்.இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் சந்திப்புகள் நடைபெற்றுள்ளன.
தங்களுக்கு தவிசாளர் பதவியைக் கொடுக்குமாறு ஒரு விண்ணப்பத்தை முன்வைத்தனர்.
மானிப்பாய் பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய நமக்கு சபைகளில் தவிசாளர் பதவியை அவர்கள் கோருகின்றனர்.
இந்த விடயத்தில் எங்களுடைய கட்சியின் தீர்மானம் ஒன்று இருக்கின்ற காரணத்தால் அதற்கு விதிவிலக்காக நாங்கள் நடப்பதாக இருந்தால், திரும்பவும் கட்சி தீர்மானம் ஒன்று எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் அவர்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றோம் என தெரிவித்தார்.