SuperTopAds

நல்லூர் ஆலய சூழலில் அமைந்து அசைவ உணவகத்தை மூடுமாறு ஆணையாளருக்கு கடிதம்

ஆசிரியர் - Editor II
நல்லூர் ஆலய சூழலில் அமைந்து அசைவ உணவகத்தை மூடுமாறு ஆணையாளருக்கு கடிதம்

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரி யாழ். மாநகர சபையின் ஆணையாளருக்கு, தமிழ்த்தேசிய மககள் முன்னணியின் 4ம் வட்டார உறுப்பினர் சந்திரசேகரம் இராஜகுமார் மற்றும் கட்சி உறுப்பினர்களால் நேற்றைய தினம் கடிதம்  வழங்கப்பட்டது.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

நல்லூர் ஆலயத்தின் சூழமைவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாமிச உணவகம், சைவ மக்களின் மனங்களுக்கும், ஆன்மீக உளவியலுக்கும் மதிப்பளிக்காமல் நடத்தப்படுவது குறித்து மக்கள் எமக்கு முறையிட்டு வருகின்றார்கள்.

சைவ மக்களின் ஆன்மீக உளவியலுக்கு இடையூறை ஏற்படுத்தும் குறித்த மாமிச உணவகத்தில் மாமிச உணவு தயாரிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றாகத் தடை விதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.