யாழில். கார் மோதி பசுமாடு உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கார் மோதி படுமாடு ஒன்று உயிரிழந்துள்ளது.
காக்கைதீவு சந்தைக்கு அருகாமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது
யாழ் நோக்கி பயணித்த கார் வீதியில் நின்ற பசுமாட்டுடன் மோதிய நிலையில்,பசுமாடு சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில். கார் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
மாட்டின் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலையில் , மானிப்பாய் பிரதேச சபை மாட்டின் சடலத்தை வீதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.