கூட்டமைப்புக்குள் மாற்று கருத்துக்கு இடமில்லை கூறுகிறார் முதலமைச்சர் சீ.வி

ஆசிரியர் - Editor I
கூட்டமைப்புக்குள் மாற்று கருத்துக்கு இடமில்லை கூறுகிறார் முதலமைச்சர் சீ.வி

தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் நாங்கள் செய்வதும், சொல்வதுமே சரி என நினைக்கும் மனப்பாங்கும் மாற்று கருத்துக்கள் கொண்டவர்களை எதிரிகளாக பார்க்கும் நிலைப்பாடும் இருப்பதாலேயே தமிழ்தே சிய கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு தனித்து செயற்படும் நிலைப்பாட்டை சுரேஸ் பிறேமச்சந்திரன் எடுத்தமைக்கு பிரதான காரணம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக் கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மாற்று கருத்துக் களை ஏற்று கொள்ளும் மனப்பாங்கில் நாங்கள் இல்லை. அதனால் பிரச்சினைகளே உருவாகும். நாங் கள் சொல்வதும், செய்வதுமே சரி என நினைத்து கொண்டிருந்தால் பிரச்சினைகளே உருவாகும். மேலும் மாற்று கருத்துக்களை கொண்டிருப்பவர்களை எதிரிகளாக பார்க்கும் நிலைப்பாடும் உள்ளது. 

இதனா லேயே தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு தனித்து செயற்படும் நிலைப்பாட்டை சுரேஸ் பிறேமச்சந்திரன் எடுத்திருப்பதற்கு காரணம். ஆனால் எம்மை பொறுத்தளவில் தமிழ்தேசிய கூட்டமைப்பி ற்குள் உள்ள சகல கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லாமல் வேட்பாளர் இடங்களை வழங்கி தமிழ்தேசியகூட்டமைப்பானது ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்படவேண்டும். 

ஒற்றுமையாக தேர்தலை எதிர்n காள்ளவேண்டும் என்றார். தொடர்ந்து அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாகவும் அடுத்த முதல மைச்சர் வேட்பாளராக நீங்களே தேர்வு செய்யப்பட்டால் அதனை ஏற்பீர்களா? எனவும் ஊடகவியலாள ர்கள் கேட்டபோது, 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் நான் தேர்தலில் போட்டியிடபோகிறேன்என்பது எனக்கு தெரியாது. 

அவ்வாறிருக்க ஒரு வருடத்திற்கு பின் நடக்கபோவதை குறித்து இப்போது எ தற்காக கவலைப்படுகிறீர்கள். மேலும் நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேனா என்பதை அப்போ துதான் தீர்மானிப்பேன் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு