SuperTopAds

கட்டுப்பணம் செலுத்திய ஐக்கிய மக்கள் சக்தி

ஆசிரியர் - Admin
கட்டுப்பணம் செலுத்திய ஐக்கிய மக்கள் சக்தி

யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டுயிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்றையதினம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ் மாவட்டத்தின் 17 சபைகளிலும் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியானது யாழ் தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் இந்தக் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

இக் கட்டுப்பணத்தை கட்சியின் பிரதிச் செயலாளரும் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளருமான உமாசந்திர பிரகாஸ் இன்று காலை செலுத்தியுள்ளார்.

இதன் போது உமாசந்திரா பிரகாஸ் கருத்து தெரிவிக்கையில்...

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

எமது கட்சியின் தலைவர் மீது எமது மக்கள் கொண்ட நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது. கடந்த ஐனாதிபதி தேர்தலில் கூட இங்குள்ள மக்கள் அமோக ஆதரவை கொடுத்திருந்தார்கள்.

இந்த முறை கணிசமான ஆதரவை பெறக் கூடிய நம்பிக்கையோடு இளம் வேட்பாளர்களை நிறுத்தி இத் தேர்தலில் போட்டியிடுகிறோம். 

வடக்கு கிழக்கு டலையகம் உள்ளடங்களாக இலங்கை முழுவதும் உள்ள சகல சபைகளிலும் நாங்கள் போட்டி போடுகிறோம். மக்களின் ஆதரவுடன் வெற்றிகளையும் பெற்றுக் கொள்வோம் என்றார்.