இலங்கை பேஸ்புக் பாவனையாளர்களுக்கு வரப்போகும் புதிய ஆப்பு !
முகப்புத்தக நிறுவனம் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இன முரண்பாடுகளைக் தோற்றுவிக்கக்கூடிய பதிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. Facebook Removes Controversial Posts Sri Lanka Users
முகப்புத்தக நிறுவனத்தின் உற்பத்தி முகாமையாளர் தெஸ்ஸா லியோன்ஸ் சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
முகப்புத்தகத்தில் பதியப்படுகின்ற சில தகவல்களால் வெளிசமூகத்தில் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுவதாவும் இதனால் முகப்புத்த நிறுவனத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் தெஸ்ஸா லியோன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த முகப்புத்தக நிறுவனத்தின் பிரதானிகள், முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான, பதிவுகளை கட்டுப்படுத்துவதற்கு இணங்கியதுடன், அதற்கான வேலைத்திட்டத்தை அமுலாக்குவதாகவும் உறுதியளித்தனர்.
எனினும் இவ்வாறான பதிவுகளை கட்டுப்படுத்துவது மாத்திரம் போதாது என்று தெரிவித்துள்ள தெஸ்ஸா லியோன்ஸ் அவ்வாறான பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் தெரிவித்துள்ளார்.