SuperTopAds

தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி

ஆசிரியர் - Editor II
தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி

தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கோயம்புத்தூரில் தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு தமிழ்நாடு காவல்துறையினதும், இந்திய இராணுவத்தினதும் பயன்பாட்டில் இருந்த ஆயுதங்கள், தளபாடங்களும், பழங்கான போர்கருவிகள் உள்ளிட்டவையும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானுக்கு எதிராக கார்கில் போரின் போது இந்திய இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட டாங்கி ஒன்றும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இங்கு கரையோரக் காவல் படையின் படகுகளும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி ஒன்றும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்காக தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, இந்த நீர்மூழ்கி தமிழ்நாடு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள இந்தச் சிறிய நீர்மூழ்கி, பார்வையாளர்களைப் பெரிதும் கவர்வதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.