யாழ்ப்பாணத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியமைப்போம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கீகரிக்கப்பட்ட முர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகை தந்த போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, தொகுதி அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் வருகை தந்திருந்தனர்.