SuperTopAds

குட் பேட் அக்லீ டீஸர் 24 மணி நேரத்தில் பிரம்மாண்ட சாதனை!

ஆசிரியர் - Admin
குட் பேட் அக்லீ டீஸர் 24 மணி நேரத்தில் பிரம்மாண்ட சாதனை!

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தின் டீஸர் நேற்று இரவு 7 மணிக்கு வெளியாகி இருந்தது. அஜித்தை மீண்டும் மாஸ் ஆன ரோலில் பார்க்க காத்திருந்த அஜித் ரசிகர்கள் டீசரை வெறித்தனமாக கொண்டாடினார்கள். மேலும் தியேட்டரிலும் திரையிடப்பட்ட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.     

வெளியான 24 மணி நேரத்தில் குட் பேட் அக்லீ டீஸர் தமிழ் சினிமாவில் அனைத்து சாதனைகளையும் தகர்த்து இருக்கிறது.

24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்திருக்கியது GBU டீஸர். "Most Viewed Kollywood teaser in 24 hours" என இந்த சாதனையை கொண்டாடும் விதமாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு இருக்கிறது.