அமெரிக்காவின் கனிம ஒப்பந்தம் சரணடைந்தார் ஜெலென்ஸ்கி

உக்ரைனின் அரிய கனிமங்களைப் பிரித்தெடுப்பதற்கான ஒப்பந்தத்தின் இறுதிப் பதிப்பை கியேவும் வாஷிங்டனும் தயாரித்துள்ளதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்றும், கூட்டு முதலீட்டு நிதியை உருவாக்குவதும் இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
நீடித்த அமைதியைக் கட்டியெழுப்ப பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கான உக்ரைனின் முயற்சிகளை" அமெரிக்கா ஆதரிக்கிறது என்று ஷ்மிஹால் கூறினார்.
உக்ரைன் அரசாங்கம் புதன்கிழமை பின்னர் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வாஷிங்டனுக்குச் செல்வார் எனக் கூறுப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனுக்கு அமெரிக்க இராணுவ உதவியாக வழங்கப்பட்ட 60 பில்லியன் டாலர்களை விட 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனிமங்களுக்கான டிரம்பின் கோரிக்கையை ஜெலென்ஸ்கி நிராகரித்தார் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வாஷிங்டனுக்குச் சென்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்பதை ரஷ்யா அறிந்திருந்ததாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் ஒப்புக்கொண்டார்.
இதேநேரம் அமெரிக்காவுடன் மேலும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு கிரெம்ளின் தயாராகி வருவதாக புதன்கிழமை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதிகள் விளாடிமிர் புடினுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையே ஒரு புரிதல் இருப்பதாகவும், முன்னைய அழைப்பின் தொடர்ச்சியாக நேரில் சந்திப்பதாகவும் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
வெளியுறவு அமைச்சகங்கள் மூலம் நிபுணர் மட்டத்தில் தொடர்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று பெஸ்கோவ் கூறினார். ஒரு சந்திப்பு எப்போது நடக்கலாம் என்பது குறித்த குறிப்பிட்ட விவரங்களை வழங்கவில்லை.