SuperTopAds

இயக்கச்சியில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

ஆசிரியர் - Admin
இயக்கச்சியில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் இயக்கச்சி பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டவர் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரிடம் இருந்து 5.660kg கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.