கனேமுல்ல சஞ்சீவ கொலை - புத்தளம் பாலாவியில் சந்தேகநபர் கைது i

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.புத்தளம் – பாலாவியில் வைத்து குறித்த சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் ஏற்கனவே 5 கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரப்படையின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், இராணுவ கமாண்டோ படையணியின் முன்னாள் சிப்பாய் என தெரியவந்துள்ளது.