SuperTopAds

காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் உறுதி!

ஆசிரியர் - Admin
காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் உறுதி!

ஹமாஸ் வெளியிட்ட பட்டியலில் 8 பிணைக் கைதிகள் உயிரிழந்து விட்டதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக கைதிகளை விடுவிக்கும் போது, ஹமாஸ் பட்டியலில் பட்டியலிடப்பட்ட 8 பிணை கைதிகள் உயிரிழந்ததாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. முதல் கட்டத்தில் 33 பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனவரி 19 முதல் போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து, 7 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.     

உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்கள் இருவரையும் உள்ளடக்கிய ஹமாஸ் பட்டியலின்படி, மீதமுள்ள 26 பிணைக் கைதிகளில் 18 பேர் உயிருடன் இருக்கிறார்கள்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, அடுத்தக்கட்ட பிணைக் கைதிகள் விடுவிப்பு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது, இதில் அர்தல் யெஹூத்(Arbel Yehoud) மற்றும் அகாத் பெர்கர்(Agam Berger) உள்ளிட்ட மூன்று பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

மேலும் மூன்று பிணைக் கைதிகள் சனிக்கிழமை விடுவிக்கப்படுவார்கள்.

ஹமாஸின் 33 பிணைக் கைதிகளின் பட்டியலில் பெண்கள், பிபாஸ் குடும்ப குழந்தைகள்(Bibas family), 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாத மற்றும் காயமடைந்த ஆண்கள் உள்ளனர்.

மேலும் ஷிரி பிபாஸ்(Shiri Bibas) மற்றும் அவரது இரண்டு சிறுவர்கள் ஆரியல்(Ariel) மற்றும் க்ஃபிர்(Kfir) ஆகியோரின் பாதுகாப்பு குறித்து "தீவிர அச்சம்" இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) தெரிவித்துள்ளது.