இந்தியா, சீனா, பிரேசில் மீதான வரிகளை அதிகரிக்க டிரம்ப் திட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நாடுகள் என குற்றம்சாட்டி, இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அதிக வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தனது பதவியேற்பிற்கு பின்னர், ப்ளோரிடாவில் ஹவுஸ் ரிப்பப்ளிகன்களுடன் உரையாற்றும்போது, அவர் இந்த முடிவை வெளியிட்டார்.
"அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கிற நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்குத் தகுந்த பதிலடி தருவதற்காக அதிக வரிகளை விதிக்கப்படும்," என டிரம்ப் கூறினார்.
இந்தியா, சீனா, பிரேசில் ஆகியவை அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரிகள் விதிக்கின்றன என அவர் குற்றம்சாட்டினார்.
அமெரிக்காவுக்கு வர்த்தக உள்நாட்டு தொழில்களை மீண்டும் கொண்டுவரும் நோக்கில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு தகுந்த ஆதரவுகளை வழங்குவதாக டிரம்ப் அறிவித்தார்.
இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகி, அமெரிக்க தொழிற்சாலைகள் புனரமைக்கப்படலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இத்திட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ், மருந்து, எஃகு போன்ற முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதேசமயம் பசுமைச் சட்டங்கள் தளர்த்தப்பட்டு, விலையுயர்ந்த கனிமங்களின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இவை அனைத்தும் ‘American first’ கொள்கைக்கேற்ப அமுல்படுத்தப்படுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.