SuperTopAds

தயாரிப்பாளருக்கு நஷ்டம்: 9 நாட்களில் கேம் சேஞ்சர் திரைப்படம் செய்துள்ள வசூல்!

ஆசிரியர் - Editor IV
தயாரிப்பாளருக்கு நஷ்டம்: 9 நாட்களில் கேம் சேஞ்சர் திரைப்படம் செய்துள்ள வசூல்!

தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவான திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தில் கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி கதாநாயகிகளாக நடித்திருந்தனர். 

மேலும் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார். அரசியல் கதைக்களத்தில் உருவான இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்யவில்லை. கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், வசூல் அடிவாங்கியது.     

ரூ. 450 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் மட்டுமே பிரேக் ஈவன் என கூறப்பட்ட நிலையில், 9 நாட்களில் ரூ. 197 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 100 கோடிக்கும் மேல் நஷ்டம் என கூறப்படுகிறது.