SuperTopAds

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுக கட்சியில் இணைந்தார்!

ஆசிரியர் - Editor IV
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுக கட்சியில் இணைந்தார்!

நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்தார். நடிகர் சத்யராஜ் திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது மகள் திவ்யா இன்று தி.மு.க.வில் இணைந்துள்ளார். அவர் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.     

"தமிழ்நாடு முதலமைச்சர், திமுகழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜ் அவர்களின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.

அதுபோது, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.