பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக்கழிவை அகற்றாவிட்டால் நடவடிக்கை!
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக்கழிவை உடனடியாக 24 மணித்தியாலத்துக்குள் அகற்றி, சுகாதாரத்தை பேணுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை மேற்கொள்ள தவறினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் செயற்படும் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மலக்கழிவு வெளியேறுகின்ற நிலையில் உரிய அதிகாரிகளுக்கு சுகாதார துறையினர் சுகாதாரத்தை பேணுமாறு தெரிவித்த நிலையிலும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்றைய தினம் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் அந்த பகுதிக்கு சென்ற நிலையிலே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.