யாழ்.திருநெல்வேலி சிவன்- அம்மன் ஆலய சூழலில் வழிப்பறி நடக்கிறதா..?

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி சிவன்- அம்மன் ஆலய சூழலில் வழிப்பறி நடக்கிறதா..?

யாழ்.திருநெல்வேலி சிவன் -அம்மன் ஆலயச் சூழலில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபடு ம் சில இளைஞர்கள் குறித்து எவரும் கண்டு கொள்வதில்லை.

மேற்கண்டவாறு அப்பகுதி மக்கள் குற்றஞ்சா ட்டியுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிட்கு உட்பட்ட சிவன் அம்மன் ஆலயப் பிரதேசத்தின் சிவன் ஆலய தெற்கு வீதிப் 

பகுதியில் தினமும் பகல்வேளையில் கூடிநிற்கும் இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள சன சமூக நிலையக் கட்டிட மறைவில் இருந்து மதுப்பாவனையில் ஈடுபடுவதோடு 

வீதியால் பயணிக்கும் இளம்பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக அப்பகுதியால் கால் நடையாகப் பயணிப்பவர்கள் மட்டுமன்றி துவிச்சக்கர 

வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பெண்களையும் வழிமறித்து அச்சுறித்தி பணம் கோருகின்றனர். குறித்த சம்பவம் கடந்த ஒரு வாரமாக 

தொடர்கின்றபோதும் எவருமே கண்டுகொள்ளவில்லை எனவும் இதே தொடர்பில் பலதரப்பிற்கும் தகவல் வழங்கியமோதிலும் பொலிசாரும் 

அப்பகுதியை எட்டியும் பார்ப்பது கிடையாது எனவும் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை பொருட்கள் சந்தைப்படுத்தும் ஓர் பெண் உத்தியோகத்தர் 

வீதியால் கால் நடையாக பயணித்த நிலையில் அவர்கொண்டு சென்ற பொருள் பையை பிடித்தவாறு பணம் வழங்கினால் மட்டுமே விடுவோம் என மூவர் 

அச்சுறுத்தியுள்ளனர். இதேபோன்று கடந்த சனிக்கிழமை தாயார் கடை ஒன்றிற்கு பொருட்கொள்வனவனிற்கு துவிச்சக்கர வண்டியில் அனுப்பி 13 வயதுச் சிறுவனை 

அச்சுனுத்தி அச் சிறுவன்கொண்டு சென்ற 100 ரூபா பணத்தையும் பளித்துச் சென்றனர். இதேபோன்று நேற்றைய தினம் மதியம் அப் பகுதியைச் சேர்ந்த அரச ஊழியர் மோட்டார் 

சைக்கிளில் வீடு நோக்கிச் சென்ற சமயம் அப்பகுதியில் மதுபோதையில் நின்றவர்கள் வழி மறித்து தகாத வார்த்தைகளால் அச்சுறுத்தியதனையடுத்து குறித்த அரச 

உத்தியோகத்தர் அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் அடைக்கலம் புகுந்துள்ளார். இதேநேரம் அப்பகுதியில் மூடியுள்ள கட்டிடத.தின் முன்னாள் கூடும் 

இவ்வாறு இனம்தெரியாத அப் பகுதியை சாரத இளைஞர்களின் தகதா வார்த்தைப் பிரயோகம் மதுப்பாவனையின் காரணமாக அப்பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர் 

பகல்வேளையிலும் வெளியில் நடமாட அச்சம்கொண்டுள்ளதாகவே சுட்டிக்காட்டுகின்றனர். எனவே இது தொடர்பில் பொலிசார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

என அவசர கோரிக்கை விடுக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு