ஒற்றையாட்சிக்கு கீழ் வழங்கப்படும் அதிகாரங்களும் மீள பெறப்படும் சமஷ்டியே வேண்டும் என்கிறார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி

ஆசிரியர் - Editor I
ஒற்றையாட்சிக்கு கீழ் வழங்கப்படும் அதிகாரங்களும் மீள பெறப்படும் சமஷ்டியே வேண்டும் என்கிறார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி

இலங்கை அரசாங்கம் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் தமிழர்களுக்கு சில உரிமைகளை வழங்கி னாலும் பெரும்பான்மை மக்களின் நிலைப்பாடே மேலோங்கியதாக இருக்கும். பெரும்பான்மை மக்களின் நிலைப்பாட்டுக்கு அமைய வழங்கப்பட்ட அதிகாரங்கள் எப்போதும் திரும்ப பெறப்படலாம் அதற்கு மிக சிறந்த உதாரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் நீதிமன்றினால் பிரிக்கப்பட்டமை அமைந்திருக்கிறது.

மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். சமகால அரசியல் நில மைகள் குறித்து முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், எங்கள் உரிமைகளை பறித்த அர சாங்கம் பறித்ததில் சிலவற்றை திருப்பி தருவதாக கூறுகிறது. ஆகவே அதனை தரட்டும். ஆனால் எங்களை பொறுத்தளவில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றிணையே நாங்கள் கேட்போம். சமஷ்டி அடி ப்படையிலான தீர்வு ஒன்றே எமக்கான உரித்துக்களை தரும். மேலும் என்ன பிரச்சினை? எவ்வாறு பிர ச்சினை உருவானது? அதற்கான தீர்வு என்ன? என ஆராய்ந்து தீர்வை வழங்கவேண்டும். அதனை விடு த்து இவ்வளவுதான் தருவோம், இதற்கு கீழ் தரமாட்டோம், இதற்கு மேல் தரமாட்டோம் என பேசி கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை. 

மேலும் ஒற்றையாட்சியின் கீழ் பெரும்பான்மை மக்களின் நிலைப் பாடே மேலோங்கி இருக்கும். அதனால் அரசாங்கம் தரும் சில உரிமைகளை எந்த சந்தர்ப்பத்திலும் மீள பெற்று கொள்ள இயலும். அதற்கு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு கிழக் கு மாகாணம் பிரிக்கப்பட்டமை மிக சிறந்த எடுத்துக்காட்டாகும். அவ்வாறு எதிர்காலத்திலும் நடக்கலாம்

நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவ்வாறு நடக்காது நாங்கள் பார்த்து கொள்வே hம் என்பதையெல்லாம் நம்ப இயலாது. எனவே ஒரு இன குழுமம் மற்றய இன குழுமத்தை அதிகாரம் ப ண்ண இயலாத சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நாங்கள் கேட்கிறோம். மற்றபடி நாட்டை பிரிக்கவே ண்டும் என நாங்கள் ஒருபோதும் கேட்கவில்லை. அதேபோல் ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சியே அதனாலேயே ஏக்சத் இராச்சிய என நாங்கள் கூறியுள்ளோம். அதாவது ஒற்றையாட்சி என்பதை தவிர்த்து ஐக்கிய இராச்சிய என கூறுங்கள் என கேட்டிருக்கிறோம். அதேபோல் சில விடயங்களை ஒ வ்வொருவரும் பார்க்கும் பார்வை வித்தியாசமானது. சிலர் இவ்வளவு அதிகாரங்களையும் பெற்றால் போ துமானது என சிலர் நினைக்கலாம், சிலர் கொஞ்ச அதிகாரங்களை பெற்றால் மிகுதியை பின்னர் பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கலாம். 

சிலர் இப்போது தருபவற்றை பெறாமல் விட்டால் எப்போதும் கிடைக் காமல் போகலாம் என நினைக்கலாம் ஆனால் எம்மை பொறுத்தளவில் பிரச்சினையை வரலாற்றுரீதியா க ஆராய்ந்து அதற்கு இப்படி தீர்வை வழங்கால் மட்டுமே பொருத்தமானது என்பதை எப்போதும் தெளி வாக கூறிக்கொள்வோம். மற்றவர்கள் பற்றி பேச்சு தேவையில்லை என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு