முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் பொறுப்புகூறலில் இருந்து தவறிவிட்டார்..

ஆசிரியர் - Editor I
முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் பொறுப்புகூறலில் இருந்து தவறிவிட்டார்..

வடமாகாண அமைச்சர் சபை மாகாணசபைக்கு கூட்டாக பொறுப்புகூற கடமைப்பட்டுள்ளதாலும், வகைசொல்ல வேண்டியுள்ளதாலும் என 

அரசியலமைப்பின் 154F(6) ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அந் த பொறுப்புகூறல் வாயில் வந்ததை கூறுவதாக அமைய கூடாது. 

மேற்கண்டவாறு வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறியுள்ளார். மாகாணசபை அ மைச்சர்கள் குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து 

ஆராய்வதற்காக இன்று நடைபெற்ற விசேட அமர்வின்போதே எதிர்கட்சி தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

பொறுப்புகூறல் அது உண்மையானதாகவும், பொறுப்புடன் கூறப்படுவதாகவும் அமைதல் வேண்டும்.  உண்மையைத் திரிபுபடக் கூறுவது 

கூடப் பொய்யிற்குச் சமனாகும்.  கௌரவ அவைத் தலைவர் அவர்களே, கடந்த அமர்வின் போது கௌரவ சயந்தன் அவர்களால் 

“ஆளுநர் முதலமைச்சரிடம் கோரியுள்ளார் உங்கள் அமைச்சர்கள் யாவரென்று அறியத் தாருங்கள் என்று” உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் 

குறுக்கிட்ட கௌரவ முதலமைச்சர் அவர்கள் தன்னிடம் அப்படியொன்றும் கேட்கவில்லை எனக் கூறியிருக்கின்றார். 

என்னிடம் கௌரவ ஆளுநர் அவர்களால் அவ்வாறு கோரி 05.07.2018இல் அனுப்பப்பட்ட கடிதமும், அக் கடிதம் முதலமைச்சர் காரியாலயத்திலும் மற்றும் 

கோவில் வீதியிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வதிவிடத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்களும் உள்ளளன. 

இது ஓர் முக்கிய விடயமாதலால் மறு நாள் 06.07.2018ஆம் திகதியன்றும் ஓர் நினைவூட்டல் கடிதமும் விரைவு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஊடகங்கள் சபை அமர்வின் பின் கௌரவ முதலமைச்சரிடம் மின்னஞ்சல் ஊடாகக் கேட்டதற்கு 

அன்றைய சபை அமர்வின் பின்னர்தான் தனக்கு அப்படி ஒரு கடிதம் கிடைத்துள்ளதாகப் பதிலளித்துள்ளதாக அறிகின்றோம்.

 இவ்வாறான சூழலில் கௌரவ முதலமைச்சர் அவர்கள் தன்னிடம் அப்படியொன்றும் கேட்கவில்லை என்று 

சபைக்கு விளம்பியது இச் சபையை அவமதித்த செயலாகவே கருத வேண்டியுள்ளது. பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிய கௌரவ நீதியரசர் 

முதலமைச்சர் அவர்கள் இச் சபையைத் தவறாக வழி நடத்தியுள்ளார். அத்துடன், கடந்த அமர்வின் போது கௌரவ முதலமைச்சர் அவர்களால் 

மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக ஓர் விளக்கவுரை ஆற்றப்பட்டுள்ளது. அவ் விளக்கவுரையிலும் எவ்வாறு உண்மைக்குப் புறம்பான விடயங்கள் திரிபுபடுத்திக் கூறப்பட்டுள்ளது 

என்பதனையும் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். அவரது ஷஉரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயம் 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தின் படி எந்தவொரு மாகாண முதலமைச்சர் தானும்  தமது அமைச்சர் குழாமின் அமைச்சர் 

ஒருவரை நியமிக்கவோ, பதவியிறக்கவோ முடியாது  என்பதாகும். இவ்வாறு கௌரவ முதலமைச்சர் அவர்கள் கூறியிருப்பது உண்மையைத் திரிபு படுத்திக் கூறியிருக்கும் ஓர் செயலாகும். 

இலங்கை அரசியலமைப்பின் பிரிவு 154F(5)  இற்கு அமைய “ஆளுநர் பிரதான அமைச்சரின் ஆலோசனை மீது அம் மாகாணத்திற்கென 

அமைக்கப்பட்ட மாகாண சபையின் உறுப்பினர்களிலிருந்து ஏனைய அமைச்சர்;களை நியமித்தல் வேண்டும்”. 

அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும்தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதே அன்றி அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் குறிப்பிடப்பட்டில்லை. 

பொதுவாக ஒரு பதவிக்கு நியமிக்கும் அதிகாரம் யாரிடமுள்ளதோ நீக்கும் அதிகாரமும் உள்ளதென்பதனை “மறைமுக ஒப்பு”  என்று சொல்வார்கள்.  

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 164(1) மாநிலங்களின் முதமைச்சர்களையும்,  அமைச்சர்களையும் அமைப்பது தொடார்பாக எமது அரசியலமைப்பில் உள்ளது போல் “ஏனைய அமைச்சர்கள் 

முதலமைச்சரின் ஆலோசனையில் ஆளுநரால் நியமிக்கப்படுவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கும் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் யாரிடமென்று குறிப்பிடப்படவில்லை. 

நான் இரண்டு அரசியலமைப்பிலும் உள்ளவாறு ஆங்கிலத்தில் படிக்கின்றேன்: இலங்கை அரசியலமைப்பு பிரிவு 154F(5)

“The Governor shall, on the advice of the Chief Minister, appoint from among the members of the Provincial Council constituted for that Province, the other Ministers.”

இந்திய அரசியலமைப்பு பிரிவு 164(1)

“The chief Minister shall be appointed by the Governor and the other Ministers shall be appointed by the Governor on the advice of the Chief Minister” 

இந்தியாவிலிருக்கும் 29 மாநில அரசுகளிற்கும் அமைச்சர்களை நியமிப்பது, நீக்குவது தொடர்பில் இது வரை சர்ச்சைகள் இருந்ததாக நானறியேன். 

அங்கு இந்தப் பிரிவின் அமுலாக்கத்தினால் மாநிலங்களின் அதிகாரம் ஆளுநரிற்குத் தாரை வார்த்துக் கொடுப்பதாக 

எங்கும் விமர்சித்ததாக எனக்குத் தெரியாது. பிரித்தானியாவிற் கூட பிரதம மந்திரியையும், ஏனைய மந்திரிகளையும் நியமிக்கும் மற்றும் 

நீக்கும் அதிகாரம் மகாராணியிடமே உள்ளது. அதற்காக மகாராணி தான் விரும்பியது போல் அமைச்சர்களை நியமிக்கவோ, 

நீக்கவோ முடியாது. இவை ஜனநாயக நடைமுறையில்  எற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள். மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தெளிவாகக் 

கூறப்பட்டிருப்பது போல் இங்கு எழுந்துள்ள பிரச்சினை பிரிவு 154F(5)தொடர்பான பொருள்கோடல்  அல்ல. 

அமுலாக்கம் கொடர்பானதே. அமுலாக்ககத்தினைச் சரிவரச் யாகச் செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகளும் எழுந்திருக்காது. 

கௌரவ அவைத் தலைவர் அவர்களே, இங்கு இன்னொரு விடய்ததையும் கூற விரும்புகின்றேன். 

இந்த நாட்டில் அரசியலமைப்பு என்ற ஒன்று இருக்கின்றது, அதில் என்ன விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றது என்பது கூடத் தெரியாமல் 

கௌரவ உறுப்பினர் ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்திருக்கின்றார். 

கௌரவ முதலமைச்சர் தான் நியமித்த அமைச்சை, அமைச்சர்களை மாற்றுவதற்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக 

ஊடக சந்திப்பொன்றில் கூறியிருக்கின்றார். என்ன வழக்கு என்ற விபரமே தெரியாமல் அவர் “உயர்நீதிமன்றத் தீர்ப்பானது” என்று 

கூறியிருப்பதிலிருந்தே அவர் இந்த விடயங்களை எவ்வளவு சரியாகத் தெரிந்து கொண்டு ஊடகங்களிற்குக் கருத்துக் கூறுகின்றார் என்பது புலனாகும். அத்துடன் “முதலமைச்சர் தான் நியமித்த அமைச்சர்களை” என்று கூறியிருக்கின்றார். 

அவரிற்குத் தெரியாது அமைச்சர்களை நியமித்தது முதலமைச்சர் அல்ல, முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரில் ஆளுநர் என்பது. 

அவரது இவ் விடயம் தொடர்பான அறியாமையை இட்டு வருந்துகின்றேன். கௌரவ அவைத் தலைவர் அவர்களே, கௌரவ முதலமைச்சர் அவர்களால் அமைக்கப்பட்ட வடக்கு மாகாண 

அமைச்சர்களிற்கெதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையினைக் கடந்த வருடாம் யூன் மாதம் ஆரம்பத்தில் சபையில் சமர்ப்பித்து 

அதன் பின் யூன் 14ஆம் திகதி அவ் அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான தனது நடவடிக்கைகளை அறிவித்ததில் இருந்து ஏறத்தாழ 4 அல்லது 5 

மாதங்கள் வரை மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாடுகள் யாவும் ஓர் ஸ்தம்பித நிலையிலேயே காணப்பட்டது. 

அதே போன்று கடந்த மாதம் 29ஆம் திகதி கௌரவ டெனிஸ்வரன் அவர்களினால் தன்னை அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றுவதற்கு 

உள்ள தடைகளை நீக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வழக்கின் தீர்ப்பு வந்ததிலிருந்து 

மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்த நிலையிலேயே இருக்கின்றது. யார் அமைச்சர்கள், 

யார் துறைசார் நிறைவேற்றுத் துறைக்குப் பொறுப்பு என்ற தெளிவற்ற நிலை மாகாண சபையின் செயற்பாடுகளை மந்த கதிக்கு இட்டுச் சென்றுள்ளது. 

ஏற்கனவே நொண்டிக்குதிரை போல் மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள்   வினைத்திறனற்றவையாக இருந்த நிலையில் 

இவ்வாறான நிகழ்வுகள் முடமாக்கப்பட்ட குதிரையாக மாகாண சபையாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. 

ஆதலால் கௌரவ அவைத் தலைவர் அவர்களே, நான் கௌரவ முதலமைச்சர் அவர்களை வினயமாகக் கேட்டுக் கொள்வது மேன்முறையீட்டு 

நீதிமன்றத்தின் கட்டளையினை ஏற்று கௌரவ டெனிஸ்வரன் அவர்கள் தொடர்ந்து அமைச்சராகப் பதவி வகிப்பதற்கு இருக்கின்ற 

முட்டுக்கட்டைகளை நீக்கி அரசியலமைப்பின் ஏற்பாடுகளிற்கு அமைய எல்லாமாக ஐந்து அமைச்சர்களிற்கு மேல் இருக்க 

வேண்டுமென்பதற்கு அமைவாக ஏனைய மூவரும் யாரென்பதைத் தீhர்மானித்து ஆளுநர் ஊடாக உரியமுறையிற் பரிசீலனைசெய்து 

மாகாண சபையை சுமூகமான முறையில் இயங்குவதற்கு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு