SuperTopAds

வடமாகாணசபையை கலைப்பதற்கு சதி நடக்கிறது, முதலமைச்சர் தவறாக வழிநடத்தப்படுகிறார்...

ஆசிரியர் - Editor I
வடமாகாணசபையை கலைப்பதற்கு சதி நடக்கிறது, முதலமைச்சர் தவறாக வழிநடத்தப்படுகிறார்...

வடமாகாணசபையை இக்கட்டான நிலைக்குள் தள்ளி மாகாணசபையின் செயற்பாடுகளை முடக் குவதன் ஊடாக மாகாணசபையை கலைப்பதற்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் ஒரு கை வேலை செய்து கொண்டிருக்கின்றது. 

மேற்கண்டவாறு மாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சந்தேகம் வெளியிட்டிருக்கின் றார். வடமாகாணசபை அமைச்சர்கள் யார்? என்பது குறித்து ஆராய்வதற்கான விசேட அமர்வு ஒ ன்று இன்று பேரவை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. 

இதன்போதே அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகை யில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை ஒன்று செயற்பட இயலாத நிலையில் அல்லது அந்த 

சபையின் செயற்பாடுகளில் தொய்வு நிலை உரு வாகுமானால் அந்த சபையை கலைக்கும் படி ஆளுநர் ஜனாதிபதிக்கு கூறலாம். அதற்கு சட் டத்தில் இடமிருக்கின்றது. 

தற்போது வடமாகாணசபை இருக்கும் தொய்வு நிலையில் அல்லது செயற்பட இயலாத நிலையில் வடமாகாணசபை கலைக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்திருக்கின்றது. 

மாகாணசபையின் ஆட்சிக்காலம் இன்னும் 4 மாதங்களே இருக்கும் இந்த இறுதிக் கட்டத்தில் மாகாணசபைக்கு அழுத்தங்களை கொடுப்பதன் ஊடாக சபை கலைக்கப்படவேண்டும். 

என எங்கோ இருந்து ஒரு கை மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ இயங்கிக் கொ ண்டிருக்கின்றது. அவ்வாறான சதி நடந்து கொண்டிருப்பதாகவே எண்ண தோன்றுகின்றது. 

அவ்வாறு மறைமுகமாகவும், நேரடியாகவும் செயற்படுகிறவர்களின் எண்ணப்படி சபை கலைக்கப்படுவதற்கான ஏது நிலைகள் இப்போது தோன்றியிருக்கின்றது. 

இதனை தனிப்பட்டவர்களுடைய கௌரவ பிரச்சினையாக பார்க்க இயலாது. முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை எவேரா ஒருவர் பிழையாக வழிநடத்திக் கொண்டிருக்கின்றார். என அவை தலைவர் மேலும் கூறியிருக்கின்றார்.