மாகாண அமைச்சர்கள் விவகாரம் சபையில் குழப்பம், பலர் வெளிநடப்பு..

ஆசிரியர் - Editor I
மாகாண அமைச்சர்கள் விவகாரம் சபையில் குழப்பம், பலர் வெளிநடப்பு..

வடமாகாணசபை அமைச்சர்கள் யார்? என்பது குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற விசேட அமர்வினை முதலமைச்சர் உள்ளிட்ட 5 

அமைச்சர்களும் புறக்கணித்துள்ளதுடன், ரெலோ, பு ளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளும் இந்த அமர்வை புறக்கணித்துள்ளன. 

அமைச்சர் பா.டெனீஸ்வரன் தற்போதும் அமைச்சராக இருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில் சட்டத்தின் 

பிரகாரம் மாகாண அமைச்சர்கள் 5 பேர் யார்? என குழ ப்பம் நிலவிவருகிறது.  இது குறித்து ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்காக வடமாகாணசபையில் 

விசேட அமர்வு ஒன்று இன்று நடைபெற்றிருந்து. மேற்படி அமர்வில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை. 

என கூறி முதலமைச்சர் அவைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் உயர் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதானாலும், 

மேற்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு விமர்சிக்கப்படலாம் என்பதாலும், தமக்கு வேறு முக்கியமான வேலை ஒன்று இருப்பதாலும், 

அமர்வில் கலந்து கொள்ள இயலவில்லை என கூறியுள்ளார். அதேபோல் மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் மாகாண 

விவசாய அமைச்சர் க.சிவ நேசன் ஆகியோரும் கடிதம் எழுதியுள்ளனர். மேலும் கல்வி அமைச்சர் கடிதம் எதனையும் ச மர்ப்பிக்காததுடன் சபைக்கு சமூகமளிக்கவில்லை. 

சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் சபைக்கு வந்திருந்தார். எனினும் ரெலோ கட்சி தாம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் தீர்மானம் சரியானது என ஏற்றுக் கொண்டு

 தாம் சபையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து சுகாதார அமைச்சர்  ஞா.குணசீலன் உள்ளிட்ட 5 மாகாணசபை உறுப்பினர் சபையிலி ருந்து வெளிநடப்பு செய்தனர். 

தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா உரையாற்றும் போ து அரசியலமைப்பு குறித்து தெரியாத மாகாணசபை உறுப்பினர் ஒருவர் 

வவுனியா மாவட்டத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தியுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி உறுப்பினர்  ம.தியாகராஜா 

குறித்து சபையில் பேசியதை தொடர்ந்து அவரும் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். இதேபோல் நேற்றைய அமர்வில் புளொட் கட்சியின் 

மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் சபையில் இருந்திருக்கவில்லை. இந்நிலையில் தனியே தமிழரசு கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள், 

மற்றும் ஈ.பி.டி.பி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்களும் சபையில் தொடர்ந்து இருந்ததனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு