பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்தால் இந்தியா சினம்!
அனைத்து கனடா இந்துக்களும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளமை மோடி அரசுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததையடுத்து மோதல் போக்கு ஏற்பட்டது.
சமீபத்தில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவோம் என்று கனடா அரசாங்கம் தெரிவித்ததால் இரு நாட்டு உறவிலும் விரிசல் அதிகரித்தது.
இந்த நிலையில் ஒட்டாவாவில் இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு உரையாற்றியபோது,
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர், ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதேபோல் கனடாவில் மோடி அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளனர்,
ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த இந்து கனேடியர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றார். இதன் மூலம் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளனர் என்பதை ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார்.
அதேவேளை தனது கருத்து மூலம் இந்தியாவை மீண்டும் சீண்டி உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.