சீமான் ஏன் தம்பின்னு சொன்னார்? விஜய்க்கு ஆதரவாக பேசிய பிரேமலதா விஜயகாந்த்!
சீமான் திடீரென அந்நியனாகவும் மாறுவார், அம்பியாகவும் மாறுவார் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென அந்நியனாகவும் மாறுவார், அம்பியாகவும் மாறுவார்.
முதலில் ஏன் தம்பி என்று சொன்னார், பிறகு ஏன் லொறியில் அடிப்பட்டு சாகணும் சொல்கிறார். அனைத்திற்கும் அவர் தான் பதில் சொல்ல வேண்டும். எல்லா நேரத்திலும் ஒரே நிலைப்பாடாக தான் இருக்க வேண்டும்.
எல்லோருக்கு பேசுகின்ற சக்தியை கடவுள் கொடுத்திருக்கிறார். அதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேச கூடாது.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு தன்னுடைய எதிரி யார் என்று நினைத்து வருவார்கள். அதேபோல தான் விஜயும் தன்னுடைய கருத்தை சொல்லி இருக்கிறார். அதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
விஜய் மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார். அவர் நடந்து வரவேண்டிய பாதை ஏராளம். இதனால், அவருடைய செயல்பாடுகளை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.