கூலி படப்பிடிப்பு தொடங்கும் முன் சிகிச்சை குறித்து ரஜினி கூறினார் - லோகேஷ்..
ரஜினியின் உடல்நிலை குறித்து யூடியூப் சேனல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக பேசி பீதியை கிளப்பியதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விமர்சித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், 40 நாட்களுக்கு முன்பு 'கூலி' படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே மருத்துவ சிகிச்சைகள் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்ததாக விளக்கமளித்தார்.
30ஆம் தேதியன்று ரஜினி சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்பதால் 28ஆம் தேதி அவருடைய படப்பிடிப்பை முடித்து அனுப்பி வைத்ததாகவும்,
அடுத்த நாள் மாலையே அவர் மருத்துவமனைக்கு சென்றதாகவும் லோகேஷ் கூறினார்.