ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இஸ்ரேலிற்குள் நுழைவதற்கு தடை! இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு..
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேலால் வரவேற்கப்படாதவர் என அறிவித்துள்ள அந்த நாடு அவர் தனது நாட்டிற்குள் நுழைவதற்கு தடைவிதித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலை ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் கண்டிக்க தவறியதன் காரணமாக இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளது என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் இஸ்ரேலிற்கு எதிரானவர் என தெரிவித்துள்ள இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் அவர் பயங்கரவாதிகள் பாலியல்வல்லுறவில் ஈடுபடுபவர்கள் கொலைகாரர்களிற்கு ஆதரவளிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் ஐக்கியநாடுகள் மீதான கறையாக குட்டெரெஸ் கருதப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.