வடமராட்சி கிழக்கில் அடாத்தாக வாடி அமைத்த 7 பேர் தலா 3 லட்சம் சரீர பிணையில் விடுதலை..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி கிழக்கில் அடாத்தாக வாடி அமைத்த 7 பேர் தலா 3 லட்சம் சரீர பிணையில் விடுதலை..

வடமராட்சி கிழக்குப் பகுதியில் அரச நிலத்தில் அனுமதி இன்றி வாடி அமைத்து கடலட்டை  தொழில் புரிந்த 8 வாடி உரிமையாளர்களையும் தலா 3 சரீரப் பிணையிலும் 

ஒரு லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் செல்லுமாறு கிளிநொச்சி பதில் நீதவான் உத்தரவிட்டார்.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடலட்டை பிடிக்கும் பிற மாவட்ட மீனவர்கள் அரச நிலத்தில் அனுமதியின்றி வாடி அமைத்து தொழில் புரிந்து வருவதனால் குறித்த 8 வாடி உரிமையாளர்களிற்கும் எதிராக 

1987ம் ஆண்டின் 7ம் இலக்க அரச காணியின் ஆட்சியை மீளப்பெறுவதற்கான சட்டத்தின் கீழ் மருதங்கேணி பிரதேச செயலாளரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கே நேற்றைய தினம் முதலாவது தடவையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .

இதன்போது 8 வாடி உரிமையாளர்களில் 7 வாடி உரிமையாளர்கள் மன்றில் சமூகமளித்ததோடு ஒருவர் தரப்பில் சட்டத்தரணியும் மன்றில் ஆஐரானார். 

குறித்த வழக்கினை ஆராய்ந்த கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் கிறேசியன் . குறித்த வழக்கின் 7 வாடி உரிமையாளர்களையும் 3 சரீரப் பிணை மற்றும் ஒரு லட்சம் ரூபா ரொக்கப் பிணையில் 

செல்ல அனுமதித்ததோடு 8வது வாடி உரிமையாளரும் நேரில் மன்றிற்கு சமூகமளிக்க வேண்டும். எனக் கட்டளையிட்டதோடு குறித்த வழக்கினை எதிர்வரும் 17ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு