தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை யாழ்.பல்கலைக்கழகம் தொடர்து போராடும்.

ஆசிரியர் - Editor I
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை யாழ்.பல்கலைக்கழகம் தொடர்து போராடும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் காக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நாம் தொடர்ச்சியாக போராடுவோம். அதே சமயம் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் தங்களுடைய பொறுப்பை அறி ந்து சகல அரசியல் கைதிகளினதும் விடு தலைக்காக உழைக்கவேண்டும். மேற்க ண்டவாறு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கே.கிருஷ்ணமேன்ன் கூறியுள்ளார்.

பல்கலைகழகத்தின் சமகால செயற்பாடு கள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு கூறி யுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறு கையில்,

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியிரு ந்த கதவடைப்பு போராட்டத்தினால் யாழ். பல்கலைக்கழகத்தின் 3 பீடங்களின் வகுப் பு புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டது. தற்போ து அரசியல் கைதிகளுக்கு ஆதரவான போ ராட்டத்தை மாணவர்கள் நிறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து 13ம் திகதி வகுப்புக்க ள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. 13ம் தி கதி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின் னர் பல்கலைகழகத்திற்குள் அமைதியான முறையில் அரசியல் கைதிகளுக்காக போ ராட்டம் நடத்துவோம். அதேபோல் தமிழ் மக் கள் அரசியல் கைதிகளுடைய விடுதலை யின் தேவையை உணர்ந்து அரசியல்வாதி கள் மற்றும் மக்கள் அரசியல் கைதிகளுக் காக இணைந்து போராட வேண்டும்.

என பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக கோரிக்கை விடுத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு