SuperTopAds

விடாமுயற்சி ரிலீஸ் எப்போது?

ஆசிரியர் - Admin
விடாமுயற்சி ரிலீஸ் எப்போது?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா நடித்துள்ளார். 

இவர் மட்டுமின்றி அர்ஜுன், ஆராவ், ரெஜினா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ஒரே ஒரு பாடல் மட்டும் இன்னும் எடுக்கவேண்டியது உள்ளதாம். இதற்கான ஸ்பெயின் நாட்டிற்கு படக்குழு செல்லப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி தீபாவளிக்கு வெளிவருவது குறித்து உறுதியாக தகவல் வெளிவரவில்லை. ஆனால், தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் விடாமுயற்சி படத்தை கண்டிப்பாக வருகிற தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்களாம். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வரவிருக்கும் காரணத்தினால் கண்டிப்பாக, அதே தேதியில் வெளிவரவிருந்த சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் Bloody beggar ஆகிய படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் லைகா நிறுவனத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகப்போகிறது என்று.