தமிழகத்தை தாண்டி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகாவில் கோட் பட முதல்நாள் வசூல்!
தமிழ் சினிமா ரசிகர்கள் வெறித்தனமாக ஒரு படத்தை கொண்டாடி வருகிறார்கள், வேறு என்ன படம் நம்ம விஜய் அவர்களின் கோட் படம் தான். ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்க யுவன் இசையமைத்துள்ளார். விஜய்யை தொடர்ந்து மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன்,. அஜ்மல் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இதில் முதல்நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது சிவகார்த்திகேயன் மற்றும் த்ரிஷா ஸ்பெஷல் என்ட்ரி.
இப்பட நாயகியை தாண்டி எங்க அந்த மஞ்சள் புடவைகாரி என த்ரிஷா ரசிகர்களிடம் அதிகம் வைரலாகி வருகிறார்.
இன்று காலை முதல் படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகி வர தற்போது உலகம் முழுவதும் முதல் நாளில் படம் ரூ. 126.32 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
விஜய்யின் கோட் தமிழகத்தில் ரூ. 30 கோடி வசூல் செய்ய கர்நாடகாவில் ரூ. 12 கோடியும், கேரளாவில் ரூ. 6 கோடிக்கு மேலாகவும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 4.5 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.