கோவிட் -19 மற்றும் பொருளாதார நெருக்கடி காலத்தில் உரிமைகள் தொடர்பில் ஆராய்வு
கோவிட் -19 மற்றும் பொருளாதார நெருக்கடி காலத்தில் உரிமைகள் தொடர்பில் ஆராய்வு
தொற்றுநோய் கால நீதி மற்றும் சுகாதார உரிமை தொடர்பான மக்கள் ஆணையம் நடாத்திய கோவிட் -19 மற்றும் பொருளாதார நெருக்கடி காலத்தில் உங்களது சுகாதார உரிமைகள் மீறப்பட்டதா? உங்களிடம் மறக்க முடியாத அனுபவம் உள்ளதா? என்பது தொடர்பிலான பொது விசாரணை நிகழ்ச்சி திங்கட்கிழமை(19) காலை முதல் மாலை வரை அட்டாளைச்சேனை தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக் கருத்திட்டமானது Law & Society Trust (LST) அமைப்பினால் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அம்பாறை மாவட்ட மட்ட நிகழ்வானது மனித எழுச்சி அமைப்பின் (HEO) இயக்குநரான கே. நிஹால் அஹமட் அவர்களுடைய ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
ஆணையத்தின் தலைவராக சர்வோதய தலைவர் வின்யா ஆரியரட்ன அவர்கள் செயற்படுவது கூறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வின்போது ஆணையத்தின் உறுப்பினர் ஆய்வாளர் சிவஞானம் பிரபாகரன், தலைமை ஆய்வாளர் கலாநிதி உபுல் விக்ரமசிங்க ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மாவட்ட மட்டத்தில் மூவின சமூகங்களுடைய பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தனர். அனைவருக்கும் சம பங்கு பொறுப்புக்கூறல் மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமைகளை உறுதிப்படுத்தல் தொடர்பில் பல்வேறு விளக்கவுரைகள் வழங்கப்பட்டு பங்கேற்பாளர்கள் அனைவரும் கோவிட் -19 மற்றும் பொருளாதார நெருக்கடி காலத்தில் உங்களது சுகாதார உரிமைகள் மீறப்பட்டதா? உங்களிடம் மறக்க முடியாத அனுபவம் உள்ளதா? எனும் கருத்துக்களை பொதுவெளியில் பரிமாறிக்கொண்டனர்.
மேலும் தொற்றுநோய் கால நீதி மற்றும் சுகாதார உரிமைகளுக்கான மக்கள் ஆணையத் திட்டம் அர்ப்பணிப்புடன் செயற்படுவது குறித்தும் கோவிட்-19 தொற்று நோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள், குறிப்பாக ஒதுக்கப்பட்ட மற்றும் இலகுவாக பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய மக்களிற்கு சுகாதாரப் பராமரிப்பை அணுகுவதில் உள்ள தாக்கம் பற்றி ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்தல் தொடர்பிலும் சுகாதார நெருக்கடிகளிற்கு அரசாங்கம், நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களை அவர்களது கடமைகளிற்கு பொறுப்புக் கூற வைத்தல். சுகாதார அணுகல் தொடர்பான முடிவு எடுக்கும் நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை, சமத்துவம் மற்றும் பொறுப்பு கூறல் ஆகியவற்றைக் கோரல், சுகாதாரப் பராமரிப்பிற்கான சர்வதேச அணுகலை ஊக்குவிக்கும் கொள்கைகள் மற்றும் ஆரம்ப முயற்சிகளிற்கான அறிவூட்டல், ஒதுக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளிற்கு முன்னுரிமை அளித்தல், மற்றும் சுகாதார கட்டமைப்பில் உள்ள முறையான சமமின்மையை நிவர்த்தி செய்தல். சமூகங்களின் சுகாதாரத்திற்கான உரிமையினை நிலைநாட்டுவதற்கு அவர்களிற்கு அதிகாரமளித்தல், முடிவு எடுக்கும் நடைமுறைகளில் அவர்களது குரல் ஓங்கி ஒலிக்கச்செய்தல், சமூக நீதி மற்றும் சுகாதார சமத்துவத்தை முன்னேற்றக்கூடிய கருத்துள்ள கொள்கை மாற்றங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கல் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கோவிட் -19 மற்றும் பொருளாதார நெருக்கடி காலத்தில் உரிமைகள் தொடர்பில் ஆராய்வு