SuperTopAds

பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு - புதையுண்டவர்களை தேடுவதற்கு கருவியின் உதவியை நாடும் மீட்பு குழுவினர்!

ஆசிரியர் - Admin
பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு - புதையுண்டவர்களை தேடுவதற்கு கருவியின் உதவியை நாடும் மீட்பு குழுவினர்!

கடும் நிலச்சரிவால் உருக்குலைந்து போன வயநாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய மாநிலமான கேரளாவில் கனமழையால் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது. 

இதனால் பல குடும்பங்கள் உயிர் உடமை இன்றி தவித்து நின்கின்றனர். செவ்வாய்கிழமை அதிகாலை மக்கள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலரும் பலியாகியுள்ளனர்.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்ற இவ்வேளையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணியை தொடர்ந்து செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்ணிற்குள் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனால் சகதிகளில் சிக்கி இருப்பவர்களை ஸ்கேனனர் மூலம் கண்டுப்பிடிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் உடல் பாகங்கள் சிதைந்து இருப்பது, உறக்கத்தின் போது பலர் தங்களது உயிரை விட்டது என வயநாடு முழுவதும் மரண ஓலம் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.